பால குஜாம்பிகை சமேத கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரத்தில் வடபத்ரகாளியம்மன்,பால குஜாம்பிகை சமேத கடம்பவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கிராம பொதுமக்களால் கோவில்கள் மற்றும் பரிவார தெய்வங்கள் புதுப்பிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 3 ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 9 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை முடிவடைந்து கடம் புறப்பாடாகி 9. 35 மணிக்கு மேல் அரசமரவினாயகர், சப்த கன்னியம்மன் ,வடபத்திரகாளி அம்மன், கங்கை அம்மன் தனி சனீஸ்வரன் கோவில் கலசங்களுக்குபுனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது பின்னர் 10.45 மணி அளவில்பால குஜாம்பிகை சமேத கடம்பவனேஸ்வரர் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
யாகசாலை பூஜை மற்றும் அபிஷேகங்களை முண்டியம்பாக்கம் கண்ணன் குருக்கள்பனையபுரம் கணேசன் குருக்கள் முன் நின்று செய்திருந்தனர்.
ராதாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராம பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் செய்திருந்தனர்.