/
கோயில்கள் செய்திகள் / சதுர்த்தி விழா; கேடயம் வாகனத்தில் உப்பூர் விநாயகர் வீதி உலா வந்து அருள்பாலிப்பு
சதுர்த்தி விழா; கேடயம் வாகனத்தில் உப்பூர் விநாயகர் வீதி உலா வந்து அருள்பாலிப்பு
ADDED :31 minutes ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில், சதுர்த்தி விழா, செப்.5 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில், தினமும் விநாயகர் ஊர்வலம் நடக்கிறது. இரண்டாம் நாள் ஊர்வலமாக கேடயம் வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக, மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் தெருக்களில் மாக்கோலமிட்டு விநாயகரை வரவேற்றனர். தொடர்ந்து பக்தர்கள் விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.