பாதூர் பூரணி பொற்கலை சமேத ஐய்யனார் கோவில் ஊரணி பொங்கல் விழா
ADDED :30 minutes ago
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஐய்யனார் கோவில் ஊரணி பொங்கல் விழாவையொட்டி பாரி ஓட்டம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஐய்யனார் கோவில் ஊரணி பொங்கல் விழாவை முன்னிட்டு பாரி ஓட்டம் நடந்தது. விழாவையொட்டி கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடந்து வந்தது. நேற்று சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடந்தது. நேற்று மாலை 5.30 மணியளவில் பாதூர் ஏரி பகுதியில் சுவாமி குதிரையில் பவணி வந்து, பாரி ஓட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.