உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  காஞ்சிபுரம் சுந்தரம்மன், படவேட்டம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா விமரிசை

 காஞ்சிபுரம் சுந்தரம்மன், படவேட்டம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா விமரிசை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வி.என்.பெருமாள் தெருவில் உள்ள விக்னராஜ விநாயகர் கோவில் வளாகத்தில் சுந்தரம்மனுக்கும், படவேட்டம்மனுக்கும் 44வது ஆண்டு கூழ்வார்த்தல் விழா மற்றும் 15வது ஆண்டு தீமிதி திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு சுந்தரம்மன், படவேட்டம்மன் ஆகிய இரு அம்மன்கள் வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு கூழ்வார்த்தலும், இரவு 8:30 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடந்தன. அவற்றை தொடர்ந்து, சுந்தரம்மனுக்கும், பட வேட்டம்மனுக்கும் கும்பம் படையலிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !