நத்தம் பெரியவிநாயகர் கோவிலில் உழவாரப்பணி
ADDED :6 hours ago
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் தெரு பெரிய விநாயகர் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் உழவார பணிகள் நடந்தது. இதில் கோவிலில் உள்ள மூலவர் சன்னதி மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளிலும் சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் கழுவப்பட்டு கோவில் வளாகத்தில் கிடந்த குப்பைகள் அகற்றபட்டது. பின்னர் கோவில் வெளி பிரகாரத்தில் இருந்த செடி, கொடிகள் அகற்றபட்டது.இந்த பணியில் நத்தம் சிவனடியார்கள் திருக்கூட்டத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.