விருத்தாசலம் முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ரோற்சவம்
விருத்தாசலம்: முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில், திருப்பவித்ரோற்சவ பெருவிழா நடந்தது.
விருத்தாசலம் அடுத்த முகாசபரூர் கிராமத்தில் உள்ள 1,300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், 10ம் ஆண்டு திருப்பவித்ரோற்சவ பெருவிழா நேற்று காலை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் உலக நன்மை வேண்டி, புனிதநீர் கலசங்களுடன் சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. அதில், பவித்ர மாலைகளை உற்சவ பெருமாளுக்கு சாற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும், கோவிலுக்கு புனிதம் சேர்க்கும் வகையில், அங்குள்ள அள்ளிக்குளம் எனப்படும் அனந்தசரஸ் புஷ்கரணியில் புனிதநீராடும் வைபவம் நடந்தது. பின்னர், சுவாமி நீராடிய புனிதநீரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.