உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போத்தனுாரில் ராதா, சீதாராம கல்யாண மகோத்சவம்

போத்தனுாரில் ராதா, சீதாராம கல்யாண மகோத்சவம்

போத்தனூர்: போத்தனூர், ஜி.டி.டேங்க் அருகேயுள்ள திருமண மண்டபத்தில், விக்னேஷ்வரா பஜனா மண்டலி சார்பில், ராதா, சீதாராம கல்யாண மகோத்சவம் நேற்று முன்தினம் மாலை துவங்கியது. 24ம் ஆண்டாக நடக்கும் இந்நிகழ்ச்சியில், ராதா திருமணத்தை கவுதம், சத்யநாராயணன் குழுவினர் நடத்தினர். இதனையொட்டி குழந்தைகளுக்கான உறியடி நடந்தது. நேற்று சீதாராம திருமணத்தை, சென்னை ஆதித்யா ரமேஷ் குழுவினர் நடத்தினர். விழா குழுவை சேர்ந்தோர் அருகேயுள்ள வீடுகளுக்கு சென்று அரிசி சேகரித்து வந்தனர். நிறைவாக ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாத்தி, பஜனை நடந்தது. மூன்று வேளையும் விருந்து வழங்கப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !