உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் மருத்துவச்சி குஞ்சம்மாள் சிலைக்கு புஷ்ப அபிஷேகம்

திருப்போரூர் மருத்துவச்சி குஞ்சம்மாள் சிலைக்கு புஷ்ப அபிஷேகம்

திருப்போரூர்: தாழம்பூரில் மருத்துவச்சி குஞ்சம்மாள் சிலைக்கு புஷ்ப அபிஷேகம் நேற்று நடந்தது.


திருப்போரூர் அடுத்த தாழம்பூரில் ஸ்ரீ திரிசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அறங்காவலர் கிருஷ்ணன் குட்டியின் தாய் மருத்துவச்சி குஞ்சம்மாளின் மணிமண்டபத்துடன் சிலை கோவில் உள்ளது. குஞ்சம்மாளின் 32ம் ஆண்டு ஜீவசாமதி தினத்தையொட்டி, அவரது சிலைக்கு நேற்று புஷ்ப அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. கோவில், அறங்காவலர் கிருஷ்ணன் குட்டி, அவரது மனைவி ஓமணா, மகள் விஜயலட்சுமி, மகன் மணிகண்டன், மருமகள்உட்பட சுற்றுப்புற பகுதி மக்கள் மணிமண்டபத்திற்கு வந்து வழிபாடு செய்தனர். அதேபோல், கேரளம் மாநிலம், பாலக்காடு முண்டூர் கணக்கு பரம்பில் உள்ள மருத்துவச்சி குஞ்சம்மாள் ஜீவசமாதியில், சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !