உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பணி விரைந்து நடக்க கந்த சஷ்டி பாராயணம்

திருப்பணி விரைந்து நடக்க கந்த சஷ்டி பாராயணம்

சூலூர்: இருகூரில் உள்ள ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோவில், 1000 ஆண்டுகள் பழமையானது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், திருப்பணி துவங்கியது.

பல்வேறு காரணங்களால் திருப்பணி தடைபட்டு வருகிறது. இதனால், பக்தர்கள், சிவனடியார்கள் வேதனையில் ஆழ்ந்தனர். திருப்பணி விரைந்து நடக்க வேண்டி, சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், 36 முறை கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டுதல் நிகழ்வு கோவில் வளாகத்தில் நடந்தது. ஒரு முறை பாராயணம் முடிந்தபின், ஒரு குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, இறைவனிடம் அனைத்து பக்தர்கள், சிவனடியார்கள் வேண்டி கொண்டனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வதன் வாயிலாக தடைகள் அனைத்தும் நீங்கும்.

நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், காலை முதல் மாலை வரை, 36 முறை கவசத்தை பாராயணம் செய்தோம். திருப்பணி தடைகளின்றி விரைந்து நடந்து கும்பாபிஷேகம் நடக்க வேண்டும், என, அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினோம், என்றனர்.

நடவடிக்கை அவசியம் வேறு எங்கும் இல்லாத வகையில், இருகூர் நீலகண்டேஸ்வரர் கோவில் திருப்பணி பல ஆண்டுகளாக தடைபட்டுள்ளது.

உடனடியாக அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பு கவனம் எடுத்து, பிரச்னைகள், தடைகளுக்கான காரணங்களை களைந்து திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும், என, பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !