உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நாளை கஜமுக சூரசம்ஹாரம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நாளை கஜமுக சூரசம்ஹாரம்

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் நடைபெறும் சதுர்த்திப் பெருவிழாவையொட்டி நாளை மாலை கற்பக விநாயகர் நடத்தும் கஜமுக சூரசம்ஹார வைபவம் நடைபெறும்.


இக்கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறும். செப்.,5 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினசரி காலையில் வெள்ளிக் கேடகத்தில் விநாயகர் எழுந்தருளி புறப்பாடு நடக்கிறது. இரவில் வாகனங்களில் விநாயகர் எழுந்தருளி திருவீதி வலம் நடக்கிறது. நேற்று இரவு கமல வாகனத்தில் விநாயகர் திருவீதி வலம் வந்தார். இன்று ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். நாளை செப்.,10 அதிகாலை, மாலை 5:00 மணிக்கு உற்ஸவ விநாயகர் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி கோயில் கிழக்கு ராஜகோபுர மண்டபம் எழுந்தருள தீபாராதனை நடைபெற்று, மூலவர் சன்னதியில் பூஜிக்கப்பட்ட தந்தத்துடன் கஜமுக சூரனை வதம் செய்யப் புறப்படுவார். தொடர்ந்து கஜமுகசூரசம்ஹாரம் நடைபெறும். பின்னர் சூரனை வதம் செய்த விநாயகர் சூரனை மூஷிகமாக்கி அதில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி சிவாச்சார்யார்களால் சிறப்பு பூஜை நடை பெறும். செப்.,13 காலையில் சுவாமி தேருக்கு எழுந்தருளலும், மாலை 4:30 மணி அளவில் தேரோட்டமும், மாலை 4:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை மூலவர் சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெறும். செப்.14ல் காலையில் தீர்த்தவாரி, மதியம் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையல், இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !