ஆதிவாலீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு
ADDED :48 minutes ago
விழுப்புரம்: விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே ஆதிவாலீஸ்வரர் கோவில் உள்ளது. பிரதோஷத்தை யொட்டி, நேற்று மாலை 4:00 மணிக்கு, பிரதோஷ நாயகரான நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவருக்கும் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
பின், பூக்களால் அலங்காரிக்கப்பட்ட நந்தீஸ்வரர், மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.
பின், மாலை 6:00 மணிக்கு பிரதோஷ நாயகர் ஆலய உட்பிரகார வீதியுலா நடைபெற்றது. இந்த பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் பலர் குடும்பத்தோடு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.