உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளையான்குடி சிவன் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ விழா

இளையான்குடி சிவன் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ விழா

மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி சிவன் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் மூலவர் சோமநாதர் சுவாமிக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து வெள்ளி உற்சவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்வளாகத்தை வலம் வந்தனர். இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயிலிலும்,பூஜை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !