உப்பூர் விநாயகருக்கு திருக்கல்யாணம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
ADDED :1 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் உள்ள இக்கோயிலில் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளிபடும் வகையில் கருவறை அமையப் பெற்றுள்ளதால் வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். இங்கு ஆண்டுதோறும் சதுர்த்தி விழா பத்து நாட்கள் நடக்கிறது. தினமும் மாலையில் வெள்ளி மூஷிகம், கேடயம், சிம்மம், மயில், ரிஷபம், யானை என பல்வேறு வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் வந்தார். விழாவின் எட்டாம் நாளான இன்று மாலை 4:30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வட மாநிலங்களில் மட்டுமே விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும் நிலையில் இங்கு சித்தி, புத்தி தேவியருடன் அவருக்கு திருக்கல்யாணம் நடப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.