திம்மராயப் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரம்
மேட்டுப்பாளையம்; நூற்றாண்டுகள் கடந்து பழமையும் பெருமையும் வாய்ந்த திம்மராயப் பெருமாள் திருக்கோவில் ஜீரணோதரன் புனராவர்த்தன அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள இரும்பொறை பட்டக்காரன் பாளையம் திம்மராயப் பெருமாள் திருக்கோயில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. திருக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மற்றும் ராஜகோபுரம் பணிகள் நிறைவடைந்து வரும் 17ஆம் தேதி வியாழக்கிழமை மகா கும்பாஅபிஷேகம் நடைபெறுகிறது. இத்திருக்கோவிலில் புதிதாக அழகிய ஆலய நுழைவாயில் மூலவர் கோபுரம் ஜெயன் விஜயன் கருட கம்பம் மணி மண்டபம் விநாயகர் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் மற்றும் மூன்று நிலை ராஜகோபுரம் ஆகிய இத்திருபணியில் அடங்கும்.மகா கும்பாபிஷேகத்திற்காக அரண்மனை வடிவில் யாகசாலையும் இதில் 9 ஹோம குண்டங்கள், மற்றும் பிராதனத்துடன் சேர்த்து 7 வேதிகைகளும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வேதி கைகளில் ராஜகோபுரம், ஸ்ரீதேவி பூதேவி சமேத திம்மராயப் பெருமாள், கருடாழ்வார் ஆஞ்சநேயர் சங்கு சக்கரம் உள்ளிட்ட அழகிய வண்ண வேலைபாடுகளுடன் செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை புண்ணிய வாசனம் எஜமான சங்கல்பத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் மங்கல இசை மிருத் சங்கிரஹணம், வேத திவ்ய பிரபந்த துவக்கத்துடன் மாலையில் விமான கலசம் இரும்பொறை கைலாசநாதர் திருக்கோவிலில் இருந்து ஊர் வளமாக எடுத்து வரப்பட்டு திருக்கோவிலை அடைகிறது. பின்னர் எந்திர ஸ்தாபனம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
தொடர்ந்து 17-ஆம் தேதி காலை ஏழு முப்பது மணிக்கு மேல் மூலவர் விமானம் தோரண வாயில் ராஜகோபுரம் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாக குழுவினர் அறங்காவலர்கள் மற்றும் விழா குழு வினர் பட்டக்காரன்பாளையம் இரும்பறை ஏற்பாடு செய்கின்றனர்