உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹா­ராஷ்­டி­ரா­வில் தங்க கொழுக்கட்டை கிலோ ரூ.27,000க்கு விற்பனை

மஹா­ராஷ்­டி­ரா­வில் தங்க கொழுக்கட்டை கிலோ ரூ.27,000க்கு விற்பனை

நாசிக்: விநா­ய­கர் சதுர்த்­தி­யை­யொட்டி, மஹா­ராஷ்­டி­ரா­வின் நாசிக்­கில் உள்ள இனிப்­புக் கடை­யில், தங்க முலாம் பூசப்­பட்ட இனிப்பு கொழுக்­கட்டை விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்­டது வாடிக்­கை­யா­ளர்­களை வெகு­வாக கவர்ந்­தது. இந்த கொழுக்­கட்டை,  ஒரு கிலோ 27 ஆயி­ரம் ரூபாய்க்கு விற்­கப்­பட்­டது.


மஹா­ராஷ்­டிரா மாநி­லம் நாசிக்­கில் உள்ள ‘சாகர் ஸ்வீட்ஸ்’ என்ற இனிப்பு கடை­யில் விநா­ய­கர் சதுர்த்­தியை முன்­னிட்டு, இந்த ஆண்­டும் தங்க முலாம் பூசப்­பட்ட கொழுக்­கட்டை விற்­பனை செய்­யப்­பட்­டது. கடந்த 2021 முதல் ஒவ்­வொரு ஆண்­டும் விநா­ய­கர் சதுர்த்தி அன்று விற்­பனை செய்­யப்­படும் இந்த கொழுக்­கட்­டையை நிறைய வாடிக்­கை­யா­ளர்­கள் பார்த்து செல்­கின்­ற­னர்.கடந்த 2021ல் தங்­க­மு­லாம் பூசப்­பட்ட கொழுக்­கட்டை அறி­மு­கம் செய்­யப்­பட்­ட­போது, கிலோ 12 ஆயி­ரம் ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது.


தற்­போது தங்­கத்­தின் விலை தாறு­மா­றாக உயர்ந்து இருப்­ப­தால், இந்த ஆண்டு கிலோ 27 ஆயி­ரம் ரூபாய் என்ற விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டது. அதிக விலைக்கு விற்­பனை செய்­யப்­பட்­டா­லும் இதன் தரம் மற்­றும் தனித்­து­வ­மான தோற்­றம் கார­ண­மாக இதை ஆர்­வ­மு­டன் வாங்­கு­வ­தாக அப்­ப­குதி மக்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.முந்­திரி, பாதாம், பிஸ்தா, பாலாடை கட்டி, குங்­க­மப்பூ, ஏலக்­காய் துாள், நெய் உள்­ளிட்ட பொருட்­கள் சேர்த்து தங்க முலாம் பூசப்­பட்ட கொழுக்­கட்டை தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வகை கொழுக்­கட்­டை­யில், 24 காரட் துாய்மை­யான தரம் கொண்ட சாப்­பி­டக்­கூ­டிய தங்க முலாம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. 


நச்­சுத்­தன்மை: இதற்கு ஐரோப்­பிய யூனி­ய­னின் உணவு பாது­காப்பு அமைப்­பும் உரிய அங்­கீ­கா­ரம் வழங்­கி­யுள்­ளது. துாய்மை­யான தங்­கம், மனித உட­லின் செரி­மான அமி­லங்­க­ளு­டன் எந்­த­வித வேதி­வி­னை­யும் புரி­யாது. அது ரத்­தத்­தில் கலக்­கா­மல், செரி­மான மண்­ட­லம் வழி­யாக அப்­ப­டியே கழி­வாக வெளி­யே­றும் என டாக்­டர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.


தங்­கத்தை உண்­ப­தால் உட­லுக்கு எந்­த­வித நன்­மையோ, வைட்­ட­மின்­களோ அல்­லது ஊட்­டச்­சத்­து­களோ கிடைப்­ப­தில்லை. இது, ஆடம்­ப­ரத்­திற்­கா­க­வும், காட்சி அழ­குக்­கா­க­வும் மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. உண­வில் பயன்­ப­டுத்­தப்­படும் தங்­கம், 23 முதல் 24 காரட் துாய்மை கொண்­ட­தாக இருக்க வேண்­டும். நகை­கள் செய்­யப் பயன்­ப­டுத்­தப்­படும் தங்­கத்­தில் செம்பு, நிக்­கல் அல்­லது துத்­த­நா­கம் போன்ற பிற உலோ­கங்­கள் கலந்­தி­ருக்­கும் என்­ப­தால், அதை உட்­கொண்­டால் கடு­மை­யான நச்­சுத்­தன்மை ஏற்­படும் என­வும் டாக்­டர்­கள் எச்­ச­ரிக்­கின்­ற­னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !