கிணத்துக்கடவு வட்டாரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
ADDED :2 hours ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஆதிபட்டி விநாயகர் கோவிலில் இன்று சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.இதில், பக்தர்கள் பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.
*பெரியார் நகர் பால விநாயகர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தது. இதில், சுவாமியை தரிசனம் செய்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
*இதே போன்று சிங்ராம்பாளையம் அன்னை அபிராமி நகர் பகுதியில் உள்ள கஜமுக விநாயகர் கோவிலில் இன்று சுவாமிக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு பிரசாதம் படைக்கப்பட்டு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.