வனபத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :3 hours ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சக்தி நகர் வனபத்ரகாளியம்மன் கோவிலில், உலக நலவேள்வி குழு சார்பில், 2ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர் வலம் இன்று நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கடந்த இரண்டு நாட்களாக கணபதி ஹோமம், கோ பூஜை, பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இன்று சிறப்பு பூஜையும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின், விநாயகர் சிலை ஊர்வலம் துவக்கம், பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் முன், சிறப்பு கூட்டம் நடக்கிறது. முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக சென்று, அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றில் சிலை விசர்ஜனம் செய்யப்படுகிறது.