கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை பூஜை
ADDED :13 hours ago
கோபால்பட்டி; சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி கதிர் நரசிங்க பெருமாள் சமேத ஸ்ரீதேவி, பூதேவி அம்மனுக்கும், மூலவர் ராமானுஜர் சுவாமிக்கு திருமஞ்சனம், விஸ்வரூப பூஜைகள் மற்றும் பால்,பழம் ,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு திரவிய அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. தங்க கவச அலங்காரத்தில் கதிர் நரசிங்க பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அருகிலுள்ள ஆஞ்சநேயர் சன்னிதியிலும் பூஜைகள் நடந்தது. இதில் கோபால்பட்டி, சாணார்பட்டி, நத்தம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கதிர் நரசிங்க பெருமாளை தரிசனம் செய்தனர்.