திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பவித்திர உற்சவம்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பவித்திர உற்சவ விழாவின் இரண்டாம் நாளில் சிறப்பு ஹோமங்கள் நடந்தது.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் பவித்ர உற்சவம் துவங்கியது. விழாவில் இரண்டாம் நாளான நேற்று அதிகாலை 5:30 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம். 6:30 மணி முதல் 7:30 மணி வரை நித்திய பூஜை, 8:00 மணிக்கு யாகசாலை பூஜை துவக்கியது. தொடர்ந்து வேத பாராயணம், நான்காயிர திவ்ய பிரபந்த துவக்கம், மதியம் 12:00 மணிக்கு பூர்ணாகுதி, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஜெகளீச பெருமாள், புஷ்பவல்லி தாயார், சக்கரத்தாழ்வாருக்கு திருவாராதனம், சேவை சாற்றுமறை, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை துவக்கி வேத பாராயணம், 8:00 மணிக்கு பூர்ணாகுதி, சேவை சாற்றுமறை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியர் சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கோலாகலன் செய்து வருகிறார்.