அடைக்கல விநாயகர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் விழா
ADDED :4639 days ago
திருநெல்வேலி: நெல்லை டவுன் அடைக்கல விநாயகர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. அன்னை ராஜராஜேஸ்வரி திருவாசகம் முற்றோதுதல் வழிபாட்டுக்குழு சார்பில் அடைக்கல விநாயகர் கோயிலில் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜையும் நடந்தது. திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. சிவமுத்து குமாரசுவாமி, சொக்கலிங்கம், மாரியப்பன், முருகேசன், கிருஷ்ணவேணி, லெட்சுமி, ஜெயா உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினர் கணேசன் கலந்து கொண்டார். சிவமுருகன் பார்வதி குடும்பத்தினர் சார்பில் மகேஸ்வர பூஜை நடந்தது. ஏற்பாடுகளை சிவஅழகம்மாள், சிவபார்வதி, சிவமுத்துலெட்சுமி செய்திருந்தனர்.