கள்ளக்குறிச்சி முத்து மாரியம்மன் கோவிலில் நந்தனார் நாயனார் குருபூஜை
ADDED :18 hours ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் காலனி முத்து மாரியம்மன் கோவிலில் நந்தனார் சிவ தொண்டர் படை சார்பில் நந்தனார் நாயனார் குருபூஜை விழா நடந்தது. நந்தனார் நாயனார் எனும் 63 நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப் போவார் நாயனார் மோட்சம் பெற்ற தினமான நேற்று முன்தினம் இரவு குருபூஜை விழா நடந்தது. நந்தனாருக்கு திருவிளக்கு பூஜை, புனிதநீர் பூஜை, கலச பூஜை, விநாயகர் பூஜை, குரு பூஜை நடந்தது. பூஜைகளை சித்தம் அழகியார் உழவாரக் கூட்ட அமைப்பாளர் வேலாயுதம் தேவாரம், திருவாசகம் பாடி நடத்தி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி பெருவங்கூர் சாலை சங்கரலிங்க சித்தர் பீட நிர்வாகி சீனிவாசன் பங்கேற்று நாயனாரின் வரலாறு குறித்து பேசினார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.