உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரத்தில் வள்ளலார் திருஅவதார விழா ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்

காஞ்சிபுரத்தில் வள்ளலார் திருஅவதார விழா ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்

காஞ்சிபுரம்: திருவருட்பிரகாச வள்ளலாரின் அவதார திருநாள் விழாவையொட்டி, சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் நேற்று ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது.


காஞ்சிபுரத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என அழைக்கப்படும் சத்திய ஞான சபை உள்ளது. இங்கு, திருவருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் அவதார திருநாள் விழா நேற்று நடந்தது. காலை 5:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், ஆராதனையும், சன்மார்க்க கொடி ஏற்றுதலும் நடந்தது. காலை 7:30 மணிக்கும், மதியம் 12.00 மணிக்கும், இரவு 7:30 மணிக்கும் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. காலை 11:00 மணிக்கு அகவல் பாராயணமும், மாலை 6:00 மணிக்கு, வள்ளலாரின் மார்க்நெறிகள் குறித்தும், ‛ஏழு திரைகள்’ குறித்தும் காஞ்சிபுரம் ராமலிங்க அடிகள் அருள் நிலைய உபதலைவர் ஜோதி கோட்டீஸ்வரன் சொற்பொழிவாற்றினார். இரவு 7:15 மணிக்கு பக்தர்களுக்கு, ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. ஏற்பாட்டை சத்திய ஞான சபையினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !