காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய வருவதோடு கோயிலில் நடைபெறும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜைகளிலும் ஈடுபடுகின்றனர். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியல்களில் செலுத்துகின்றனர்.
பக்தர்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிடும் பணி நேற்று திங்கட்கிழமை கோயில் வளாகத்தில் உள்ள கொட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கோயில் அதிகாரிகள் மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கொட்டே சாய் பிரசாத், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர். கடந்த 26 நாட்களில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மொத்தம் ரூ. 1,52,72,166 லட்சம் இருந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதேபோல், உண்டியல் மூலம் 37 கிராம் தங்கம், 421 கிலோ 700 கிராம் வெள்ளி மற்றும் பல்வேறு நாடுகளின் 85 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் உண்டியலில் பக்தர்கள் காணிக்கைகளாக செலுத்தி இருந்ததாக தெரிவித்தனர். இந்த உண்டியல் பணம் கணக்கிடும் நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் பி.கே. வெங்கடேசுலு, செயல் பொறியாளர் ஸ்ரீசீனிவாச ராஜு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.