உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், கச்சி ஏகம்பம் திருமுறை அமைப்பு சார்பில், மாத சிவராத்திரியையொட்டி இன்று திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள கலையரங்க மண்டபத்தில், காஞ்சி ஏகம்பம் திருமுறை அமைப்பு சார்பில், இன்று சிவராத்திரி வழிபாடு நடந்தது. இதில், மகேஸ்வர பூஜையும், தொடர்ந்து திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், திருவாசகம் எட்டாம் திருமுறையில், 51 பதிகங்களில் உள்ள, 658 பாடல்களையும் சிவபக்தர்கள் பக்தி பரவசத்துடன் முற்றோதல் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !