விஜயீ பவ என்று பெரியோர்கள் வாழ்த்துவதன் பொருள் என்ன?
விஜய்" என்றால் வெற்றி, "பவ" என்றால் உண்டாகட்டும் என்று அர்த்தம். விஜய் பவ என்பதன் நேரடிப் பொருள் "நீ வெற்றியடைவாய்" அல்லது "உனக்கு வெற்றி உண்டாகட்டும்" என்பதாகும். பண்டைய காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்களை வாழ்த்த இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது. தற்போது தேர்வுகள், போட்டிகள், தேர்தல் அல்லது ஏதேனும் ஒரு புதிய காரியத்தைத் தொடங்கும் நபர்களை வாழ்த்தப் பயன்படுத்தப்படுகிறது. பெரியவர்கள் தங்களை விட இளையவர்களை வாழ்த்தும் போது, அவர்களுக்கு நல்லாசியாக இந்த வார்த்தையைக் கூறுவது வழக்கமாக உள்ளது. பெரியோர்கள் இந்த வாழ்த்தை வழங்கும்போது, நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடைகள் நீங்கி, முழுமையான வெற்றி கிடைக்க வேண்டும் என்ற ஆசீர்வாதம் கிடைக்கிறது.
தெய்வம் மனுஷ ரூபேன என்று சொல்வதுண்டு. தெய்வம் நேரில் நம் முன் தோன்றுவதில்லை. மனித ரூபத்தில் வந்து நமக்கு வழிகாட்டும் என்பது இதன் பொருள். நம்முடைய நன்மை கருதிப் பெரியவர்கள் சொல்வதை கடவுளின் சொல்லாக ஏற்று நடக்க வேண்டும். பெரியோர்கள்களை மதித்து அவர்கள் ஆசி பெறுவோம்.. எதிலும் வெற்றி பெறுவோம்.