உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முப்புடாதி அம்மன் கோயிலில் 12ம் தேதி கும்பாபிஷேக விழா துவக்கம்

முப்புடாதி அம்மன் கோயிலில் 12ம் தேதி கும்பாபிஷேக விழா துவக்கம்

பாவூர்சத்திரம்: ஆவுடையானூர் ஆவுடைச்சிவன்பட்டி முப்புடாதி அம்மன் கோயில் ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 12ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடக்கிறது. முதல்நாள் காலை 6 மணிக்கு மங்கள இசை, கணபதி பூஜை, யஜமான் வர்ணம், அனுக்ஞை புண்யாகவாசகம், பூர்ணாகுதி, தீபாராதனையும், மாலை 5மணிக்கு வாஸ்துபூஜை, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், பாலிகாபூஜை, யாகசாலை பூஜை, வேதகோஷம் நடைபெறுகிறது. இரண்டாம் நாள் காலை 9 மணிக்கு சூர்யாபூஜை, விசேஷ சந்தி, பரிவார தேவதைகளுக்கு ஹோமம், வேதிகைபூஜை, பஞ்சகுண்டஹோமம், தீபாராதனையும், மாலை 5மணிக்கு சயனாதிவாசகம், யந்திரஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், தீபாராதனையும் நடக்கிறது. மூன்றாம் நாள் காலை 7மணிக்கு தேவதைகளுக்கு அங்குரார்ப்பணம், ஸ்பரிசாகுதி, திரவ்யாகுதி ஹோமம், பூர்ணாகுதி, தேவகோஷம், யாத்ராதானம், கும்பபிரவேசம், மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அன்னாதனம் நடைபெறுகிறது. இரவு இன்னிசைக்கச்சேரி நடக்கிறது. ஆழ்வார்குறிச்சி வேணுகோபால் அய்யர் மற்றும் குழுவினர் கும்பாபிஷேகம், பூஜை நடத்துகின்றனர். ஆவுடைசிவன்பட்டி வரிதாரர்கள் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !