உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரை செய்யது முகம்மது அப்பா தர்காவில் 852 ஆம் ஆண்டு கந்தூரி விழா

கீழக்கரை செய்யது முகம்மது அப்பா தர்காவில் 852 ஆம் ஆண்டு கந்தூரி விழா

கீழக்கரை: கீழக்கரையில் உள்ள மகான் குத்பு செய்யது முகம்மது அப்பா செய்யது ஒலியுல்லா தர்காவில் 852 ஆம் ஆண்டு மத நல்லிணக்க கந்தூரி விழாவை முன்னிட்டு நேற்று மாலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தர்கா வளாகத்தில் உள்ள 45 அடி உயரமுள்ள கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் உலக நன்மைக்கான மவுலிது (புகழ் மாலை) ஓதப்பட்டது. வருகிற அக்., 25ல் புனித மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் நவ., 10 மாலை 6 மணியளவில் கொடி இறக்கம் செய்யப்பட்டு, மறுநாள் ஆயிரக்கணக்கானோருக்கு நெய் சோறு வழங்கப்படுகிறது. தர்காவின் டிரஸ்டி சஹாப்தீன் தலைமை வகித்தார். உறுப்பினர்கள் முகம்மது முகைதீன், ஹபீத் தம்பி, அகமது ஹசன், முகமது ஜமால், மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் ஆலிம் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் மக்பூல் சுல்தான் மற்றும் ஜமால் முகம்மது ஆகியோர் செய்திருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !