உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குற்றாலநாதர் கோயிலில் அம்பாள் பூஜையின் போது கருவறைக்கு வந்த 6 அடி மலைப்பாம்பு!

குற்றாலநாதர் கோயிலில் அம்பாள் பூஜையின் போது கருவறைக்கு வந்த 6 அடி மலைப்பாம்பு!

தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விசு திருவிழாவின் ஏழாம் நாளான இன்று சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தபோது கருவறை பகுதியில் சுமார் 6 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது. இதனால் அர்ச்சகர்கள், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விட எடுத்துச் சென்றனர். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இதே கோயிலுக்குள் நல்ல பாம்பு புகுந்த நிலையில், மீண்டும் பாம்பு புகுந்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !