உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழக்கரையில் மீலாது விழா கோலாகலம்

கீழக்கரையில் மீலாது விழா கோலாகலம்

கீழக்கரை: கீழக்கரையில் அனைத்து ஜமாஅத்தார்கள் ஒன்றிணைந்து, பழைய குத்பா பள்ளி ஜமாஅத் சார்பில் மீலாது விழா, மக்தூமியா உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.சென்னை மஸ்ஜித் அஸ்ரப் தலைவர் மஜீது தலைமை வகித்தார். பழைய கத்பா பள்ளி ஜமாஅத் தலைவர் ஹாஜா முகைதீன், அனைத்து ஜமாஅத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ஜமாஅத் செயலாளர் முகம்மது இஸ்மாயில் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் செய்யது சித்திக் தொகுத்து வழங்கினார். முன்னதாக பழைய குத்பா பள்ளி தலைமை இமாம் ஹைதர் அலி "கிராஅத் ஓதினார்.நெல்லை ஹஸனத்துல் ஜாரியாத் அரபிக் கல்லூரி முதல்வர் ஸலாஹூத்தீன் ரியாஜி, மாவட்ட காஜி ஸலாஹூத்தீன், மஸ்ஜிதுல் மக்மூர் தலைமை இமாம் முஹம்மது இல்யாஸ் காஸிமீ, கீழக்கரை கத்தீப்கள் முகம்மது முஸ்தபா, அஹமது அமானி, ஹூமாயூன் கபீர் ஆலிம், சென்னை மஸ்ஜிதுல் அஷ்ரப் தலைமை இமாம் அபுல்ஹசன் பாஸி, மேலப்பாளையம் ஹிதாயத்துல் நிஸ்வான் அரபிக் கல்லூரி பேராசிரியர் காஜா ஹூசைன், இஸ்லாமியா தக்வா மற்றும் ஆராய்ச்சி மைய நிறுவனர் பேராசிரியர் அப்துல்லா பெரியார்தாசன், மதீனத்துல் இல்ம் அரபிக்கலைக் கல்லூரி நிறுவனர் முகம்மது ஷப்பீர் அலி ஆகியோர் பெருமானாரின் சிறப்புகளை விளக்கி பேசினர். சீனிமதார் சாகிபு நன்றி கூறினார்.

மத நல்லிணக்கம் வளரவும், அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டியும் இமாம் முகம்மது சதக்கத்துல்லா "துஆ ஓதினார். நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, கமிஷனர் முகம்மது முகைதீன், வாசுதேவன் பாத்திரக்கடை உரிமையாளர்கள் ஜோதிமணி, சிங்காரவேலு, அ.தி.மு.க., நகர் செயலாளர் ராஜேந்திரன், ஜெ.,பேரவை நகர் செயலாளர் சரவணபாலாஜி, நகர் காங்கிரஸ் தலைவர் அமீதுகான், தே.மு.தி.க., செயலாளர் மதிவாணன், முன்னாள் கவுன்சிலர் வேலுச்சாமி, நகராட்சி ஓவர்சீயர் அறிவழகன், சுகாதார ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்தி, தலைமை எழுத்தர் நாகநாதன், அலுவலர்கள் சரவணன், கார்த்திக், கவுன்சிலர்கள் சாகுல் ஹமீது, ஜெயப்பிரகாஷ், ஹாஜா நஜ்முதீன், அன்வர்அலி, அஜ்மல்கான், தங்கராஜ், ரமேஷ், சுரேஷ், முகைதீன் இபுராகிம், பாவா செய்யது கருணை, ரபியுதீன், சித்திக் அலி, அரூஸியா பேகம், தாஜூன் அலிமா, பிரமுகர் கே.ஆர்.டி. கிருஷ்ணமூர்த்தி, ஒப்பந்தராரர்கள் பால்ராஜ், உத்தண்டி, பழனி, பெரியபட்டினம் ராபியா பீவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவு விழா இன்று மதியம் 4.30 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !