உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மாரியம்மன் கோயிலில் பிப்.11 முதல் மாசித் திருவிழா

நத்தம் மாரியம்மன் கோயிலில் பிப்.11 முதல் மாசித் திருவிழா

நத்தம்: நத்தம் மாரியம்மன்கோயில் மாசிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு வரும் 11ம்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகிறது. தொடர் ந்து 15 நாட்கள் நடக்கும் விழாவில் பூக்குழிதிருவிழா பிப். 26ல் நடக்கிறது. தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாக்களில் வரலாற்று புகழ்மிக்க நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா பிரச்சித்திப் பெற்றவையாகும். பல நூறு ஆண்டுகளாக இத்திருவிழா நடக்கிறது.இந்தாண்டு பிப். 11 (திங்கள்) காலை 9 மணிக்கு கொடியேற்றமும், பிப். 12(செவ்வாய்) காலை 11 மணிக்கு காப்புக்கட்டுதல் நடக்கிறது. இதற்காக கரந்தன்மலையில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருகின்றனர்.பிப். 26 (செவ்வாய்) காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை அம்மனுக்கு பால்குடம், அக்னி சட்டி எடுத் தல், கரும்பு தொட்டில் கட்டுதல் மற்றும் மதியம் 2மணிக்கு வழுக்கு மரம் ஏறுதலும் அதன்பின் பக்தர்கள் பூக்குழி இறங்குதலும் நடக்கிறது. கோயில் செயல் அலுவலர் செல்வி மற்றும் பரம்பரை பூசாரிகள் சொக்கை யா, சின்னராசு, நட ராஜ், சுப்புராசு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !