உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரஸ்வதி பூஜை: அன்ன வாகனத்தில் அருளும் அம்சவல்லி பற்றிய அறிய தகவல்கள்

சரஸ்வதி பூஜை: அன்ன வாகனத்தில் அருளும் அம்சவல்லி பற்றிய அறிய தகவல்கள்

வழக்கமாக புரட்டாசியில் வரும் சரஸ்வதி பூஜை இந்த ஆண்டு ஐப்பசியில் வருகிறது. வீணையோடு காட்சி தருபவள் சரஸ்வதி. ஆனால் வேதாரண்யம் சிவன் கோயிலில் இருக்கும் சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. இதே போல ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் வீணை இல்லாத சரஸ்வதியை காணலாம்.

    

* சரஸ்வதியின் நட்சத்திரம் மூலம். சொல்லின் செல்வரான அனுமனுக்கும் இதே நட்சத்திரம்தான்.


* அன்ன வாகனத்தில் இருக்கும் சரஸ்வதியை  ’அம்சவல்லி’ எனவும் குறிப்பிடுவர். மயிலில் இருக்கும் சரஸ்வதியை ’மயூர வாகினி’ எனவும் அழைப்பர்.


* பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி குடியிருக்கிறாள். இதனால் சரஸ்வதியை ’நாமகள், வாக்தேவி’ எனவும் குறிப்பிடுவர்.  


* தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி இருவரும் ஞானம் அருள்பவர்கள்.  இருவரின் கையிலும் அறிவின் அடையாளமாக ஸ்படிக மாலை உள்ளது.  


* சப்தமாதர் என்னும் ஏழு தெய்வங்களில் சரஸ்வதிக்கு ’பிராம்மி’ என்பது பெயர்.


*சரஸ்வதி அந்தாதியைப் பாடியவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். இவருக்காக  கிழங்கு விற்கும் பெண்ணாக வந்தாள்.  


* பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி சத்திய லோகத்தில் வாசம் செய்கிறாள்.  


* ஒட்டக்கூத்தர் எழுதிய தக்கயாகப்பரணி நூலில் சரஸ்வதி வாழ்த்து (வழக்கமாக விநாயகர் வாழ்த்து இருக்கும்) இடம்பெற்றுள்ளது.

* கர்நாடகாவிலுள்ள பஸ்ராலு மல்லிகார்ஜுனர் கோயிலில் ஞான சரஸ்வதி அருள்புரிகிறாள்.


* பாலித்தீவிலுள்ள தம்பாக் ஸைரிங் குளத்தில், விஜயதசமியன்று பக்தர்கள் புனிதநீராடுவர். இங்கு சரஸ்வதியின் வாகனமான அன்னத்தை மஞ்சள் நிறத்தில் வடிக்கின்றனர்.


* ஜப்பானியர்கள் சரஸ்வதியை ’பென்டென்’ என அழைக்கின்றனர். இங்கு கொலு கண்காட்சி வைப்பர்.  


* சரஸ் என்பதற்கு நீர், ஒளி என்பது பொருள். சரஸ்வதிக்குரிய திதி வளர்பிறை நவமி. புரட்டாசியில் வரும் நவமியை மகாநவமி என அழைப்பர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !