உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி ஒன்பதாம் நாள்: சிவபூஜை அலங்காரத்தில் மதுரை மீனாட்சி

நவராத்திரி ஒன்பதாம் நாள்: சிவபூஜை அலங்காரத்தில் மதுரை மீனாட்சி

மதுரை மீனாட்சியம்மன் இன்று சிவபூஜை அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.

மகிஷாசுர வதத்தால் தீமையை அழித்து உலகிற்கு நன்மை ஏற்பட்டாலும் பார்வதிக்கு கொலைப்பாவம் ஏற்பட்டது. இதிலிருந்து விடுபட சிவபெருமானை வழிபட்டாள்.

சுவாமியை விட அம்மனுக்குத்தான் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் முக்கியத்துவம் உண்டு. சுவாமி சன்னதிக்கு வலப்புறத்தில் மீனாட்சியம்மன் இருப்பதால் அம்மனை தரிசித்த பின்னரே சுவாமியை தரிசிப்பது மரபு.

மனைவிக்கு மதிப்பளித்து அன்புடன் நடத்தினால் அவள் கணவரைத் தெய்வமாக போற்றுவாள் என்பதையும், தம்பதியருக்குள் ஒற்றுமை அவசியம் என்பதையும் சிவபூஜை உணர்த்துகிறது. இக்கோலத்தை தரிசிப்பவருக்கு பாவம் நீங்கும். புண்ணியம் சேரும்.

பாட வேண்டிய பாடல்

உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிசெஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்கு நுண்ணுால்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !