அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்: முதல்வர் விஜய் ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து
சென்னை: ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்களை முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள், நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் துவங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்; நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்; ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும். அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
ஸ்டாலின் சொல்வதில்லை: ஆயுத பூஜை, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட ஹிந்து பண்டிகைகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து கூறுவதில்லை. ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும் என, ஹிந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும் இதுவரை ஹிந்து பண்டிகைகளுக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவிப்பதில்லை. தமிழக முதல்வர் விஜய் அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறி வருகிறார். இன்று ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துக்களை முதல்வர் விஜய் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.