உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீனுவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம்

சீனுவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சீனுவாசப் பெருமாளுக்கு புரட்டாசி திருக்கல்யாண வைபவம் நடந்தது.

விருத்தாசலம், திரு.வி.க., நகர் கற்பக விநாயகர் கோவிலில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனுவாசப் பெருமாள் சுவாமிக்கு புரட்டாசி திருக்கல்யாண வைபவம் நடந்தது.

இதையொட்டி, நேற்று முன்தினம் காலை 10:30க்கு மேல், 12:00 மணிக்குள் சிறப்பு திருமஞ்சனம், புருஷசுத்த ேஹாமம், சுதர்சன ேஹாமம், வலம்புரி சங்கு பூஜையுடன், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.

மாலை 6:00 மணிக்கு மேல், தாயார் சமேத சீனுவாச பெருமாள் உற்சவ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும், திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. பக்தர்களுக்கு சுமங்கலி பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !