வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா: பார்வேட்டை உத்சவத்துடன் நிறைவு
ADDED :2 days ago
வாலாஜாபாத்: பார்வேட்டை உத்சவத்துடன் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா நிறைவு பெற்றது.
வாலாஜாபாத் ராஜ வீதியில், வெள்ளேரியம்மன் கோவில் கொலு மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, கடந்த 10ம் தேதி நவராத்திரி உற்சவம் துவங்கியது. கொலு மண்டபத்தில் தினமும் வெள்ளேரியம்மன் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். நவராத்திரி விழா நிறைவு நாளான நேற்று இரவு பார்வேட்டை உத்சவம் நடந்தது. இன்று விஜயதசமி விழா முன்னிட்டு, சரஸ்வதி அலங்காரத்தில் வெள்ளேரியம்மன் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.