உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை நவராத்திரி உற்ஸவத்தில் அம்பு வீசிய சவுந்தரராஜப் பெருமாள்

வடமதுரை நவராத்திரி உற்ஸவத்தில் அம்பு வீசிய சவுந்தரராஜப் பெருமாள்

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா அக்.11ல் துவங்கியது. நாள்தோறும் வெவ்வேறு மண்டகபடிதாரர்களால் நவராத்திரி கொழு உற்ஸவ வழிபாடு நடந்தது. பத்தாம் நாளான இன்று மாலை பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தேர் வீதிகள் வழியே நகர் வலம் வந்தார். திருச்சி ரோடு மங்கம்மாள் கேணி சென்று பாரிவேட்டை, அம்பு வீசும் நிகழ்ச்சி நடந்தது. வடமதுரை மீனாட்சி அம்மன், காளியம்மன், மாரியம்மன், அய்யலுார் மண்டபத்தோட்டம் சக்திமுத்து மாரியம்மன் கோயில்களிலும் 10 நாட்கள் நவராத்திரி உற்ஸவ விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !