தேவனாம்பட்டிணம் கடற்கரையில் துர்கா சிலைக்கு சிறப்பு பூஜை
ADDED :21 minutes ago
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டிணம் கடற்கரையில் நவராத்திரி நிறைவு விழாவில், துர்கா சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
கடலுார் விஷ்ணு சமாஜ் சார்பில் நவராத்திரியையொட்டி கடந்த 9 தினங்களாக, வண்டிப்பாளையம் சரவணா நகரில் உள்ள விஷ்ணு சமாஜ் பவனில் துர்கா சிலைக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. நவராத்திரியின் 10ம் நாள் நிறைவு விழாவான நேற்று காலை, துர்கா சிலைக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து மேள தாளம் முழங்க தேவனாம்பட்டிணம் கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அங்கு, சிறப்பு பூஜைகள், தீபாராதனை முடிந்து சிலை கடலில் கரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வண்ண பொடிகளை முகத்தில் பூசியும், நடனம் ஆடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விஷ்ணு சமாஜ் செய்திருந்தது.