உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரும்பேர் கண்டிகையில் சூரனை வதம் செய்யும் நிகழ்வு விமரிசை

பெரும்பேர் கண்டிகையில் சூரனை வதம் செய்யும் நிகழ்வு விமரிசை

அச்சிறுபாக்கம்: பெரும்பேர் கண்டிகை எல்லையம்மன் கோவிலில், நவராத்திரியின் முக்கிய நிகழ்வான மகிஷாசூர மர்த்தினி அவதாரத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்வு நேற்று விமரிசையாக நடந்தது.


செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகையில் எல்லையம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், எல்லையம்மன் கோவிலில் 10 நாட்களாக நவராத்திரி கொளு பொம்மை வழிபாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று, மகிஷாசூர மர்த்தினி அவதாரம் எடுத்து, வன்னி மரத்தடியில் அசுரனை வதம் செய்யும் மகிஷாசூர நிகழ்வு விமரிசையாக நடந்தது. ராஜ ராஜேஸ்வரி, அன்னபூரணி மஹாலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அர்ச்சகர்கள் திருமலை, ஹரிஹரன்,உபயதாரர்கள் அரவிந்த், பிரகாஷ், கோவில் செயல் அலுவலர் தமிழரசி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !