உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளாங்கண்ணியில் புதிய தேவாலயம் திறப்பு!

வேளாங்கண்ணியில் புதிய தேவாலயம் திறப்பு!

நாகப்பட்டினம்: நாகை அடுத்த வேளாங்கண்ணியில், 15 ஆயிரம் பக்தர்கள் அமரும் வகையில் கட்டப்பட்ட புதிய தேவாலயம் திறக்கப்பட்டது. நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய நிர்வாகம் சார்பில், 400 மீட்டர் நீளம், 138 மீட்டர் அகலம், 40 மீட்டர் உயரத்தில், போர்த்துகீசிய கட்டட கலை வடிவத்தில், சிப்பி போன்ற அமைப்பில், புதிய ஆரோக்கியமாதா தேவாலயம் கட்டப்பட்டுள்ளது. ஆரோக்கியமாதா தேவாலயத்திற்கு பின்புறம், புதிய தேவாலயம், 15 ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து திருப்பலியில் பங்கேற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பீட்டிலான தேவாலய கட்டுமானப் பணிகள், கடந்த, 2006ல் துவங்கியது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, புதிய தேவாலயத்தை,ரோமில் உள்ள, போப்பின் சிறப்பு பிரதிநிதி பெர்னாண்டோ கர்தினால் பிலோனி, நேற்று மாலை, புனிதம் செய்து திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !