/
கோயில்கள் செய்திகள் / ஹிந்து சமய மன்றத்தின் உதவியுடன் படித்து பட்டம் பெற்ற பழங்குடியின மாணவி: காஞ்சி சங்கராச்சாரியார் பாராட்டு
ஹிந்து சமய மன்றத்தின் உதவியுடன் படித்து பட்டம் பெற்ற பழங்குடியின மாணவி: காஞ்சி சங்கராச்சாரியார் பாராட்டு
ADDED :5 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடம் நடத்தும் ஹிந்து சமய மன்றத்தின் உதவியுடன் படித்து பட்டம் பெற்ற பழங்குடியின மாணவியை, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று பாராட்டினார்.
ஓரிக்கை மகா சுவாமிகள் மணிமண்டபத்தில் வேதரசஷண நிதி அறக்கட்டளை சார்பில், வேத பாடசாலையில் படித்த மாணவ- – மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் நிறைவில் பழங்குடியின மாணவி காவ்யா, காஞ்சி காமகோடி பீடம் நடத்தி வரும் சமய கலாசார பண்பாட்டு சேவை அமைப்பான, ஹிந்து சமய மன்றத்தின் உதவியுடன் பி.எஸ்சி., நுண்ணுயிரியல் பிரிவில் பட்டம் பெற்றது குறித்து அறிந்த காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மாணவியை அழைத்து பாராட்டினார்.