உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் அரங்கநாத பெருமாள் கோவிலில் விஜய தசமி பிரம்மோற்சவ விழா

திருப்பூர் அரங்கநாத பெருமாள் கோவிலில் விஜய தசமி பிரம்மோற்சவ விழா

அனுப்பர்பாளையம்: திருப்பூர், அனுப்பர்பாளையத்தில் அமைந்துள்ள ஶ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாத பெருமாள் திருக்கோவிலில் விஜய தசமி பிரம்மோற்சவம் வைபவ விழா கடந்த 14 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, நேற்று 22 ம் தேதி மதியம் ஶ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாத பெருமாள் மேள தாளம் முழங்க ஆதிஷேச வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தர்சித்தனர். இன்று 23 ம் தேதி மாலை ஶ்ரீ‌ ராமர் அலங்காரத்தில் ஶ்ரீ அரங்கநாத பெருமாள் ஶ்ரீ‌ அனுமன் வாகனத்தில் திரு வீதி உலா நிகழ்ச்சி நடைப்பெறுகிறது. நாளை 24 ம் தேதி மதியம் ஶ்ரீ கருடாழ்வார் வாகனத்தில் தாயாருடன் பெருமாள் எழுந்தருள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பேறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !