உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உபதேச சாரம் வாழ்வில் அமைதி ஏற்படுத்தும் ஸ்ரீரமண சரண தீர்த்த ஸ்வாமிகள் அருளுரை

உபதேச சாரம் வாழ்வில் அமைதி ஏற்படுத்தும் ஸ்ரீரமண சரண தீர்த்த ஸ்வாமிகள் அருளுரை

கோவை: ‘‘ பகவான் ரமண மகரிஷி யின் உபதேச சாரம் பக்தர்களின் வாழ்வில் அமைதியையும் தத்துவ ஞானத்தையும் ஏற்படுத்தும்,’’ என்று ஸ்ரீரமண சரண தீர்த்த ஸ்வாமிகள் கூறினார்.


ராம் நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், பகவான் ரமண மகரிஷியின் உபதேச சாரம் குறித்து, ஸ்ரீரமண சரண தீர்த்த ஸ்வாமிகள் (நொச்சூர் ஆச்சார்யாள்), நேற்று சொற்பொழிவில் கூறியதாவது: பகவான் ரமண மஹரிஷி தனது பக்தரின் வேண்டுகோளுக்கு இணங்க, தாருகாவனத்து ரிஷிகளுக்கு சிவபெருமான் போதித்த ஞானத்தின் சாரமாக, 30 பாடல்களை தமிழில் (உபதேச உந்தியார்) அருளினார். அதில் கர்மம், பக்தி, அஷ்டாங்கம், ஞானம் என்ற நான்கு விதமான யோகங்களை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளார். அதை பக்தர்கள் பாராயணம் செய்ய வேண்டும். அப்போது நான் யார் என்ற சுய விசாரணையை நமக்கு நாமே கேட்க தோன்றும். அதற்கான விடையையும் எளிதாக பெறமுடியும். அதன் பின் பக்தியால் மட்டுமே இறைவனிடம் முக்தியடைய முடியும் என்பதை ஒவ்வொருவரும் உணரும் நிலை ஏற்படும். பகவான் ரமண மகரிஷி யின் உபதேச சாரம் பக்தர்களின் வாழ்வில் அமைதியையும் தத்துவ ஞானத்தையும் ஏற்படுத்தும். இவ்வாறு ஸ்வாமிகள் சொற்பொழிவு நிகழ்த்தினார். திரளானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !