உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முளையூர் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் பூஞ்சோலை சென்ற அம்மன்

முளையூர் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் பூஞ்சோலை சென்ற அம்மன்

நத்தம்: நத்தம் அருகே முளையூர் முத்தாலம்மன் கோவில் திருவிழா சாமி பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு முத்தாலம்மன் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு கண் திறக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் சென்ற அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் அக்னிசட்டி, அலகு குத்துதல், மாறுவேடமணிதல், மாவிளக்கு,கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பின் நேற்று மாலையில் தீ வட்டி பரிவாரங்களுடன் பக்தர்கள் ஆரவாரத்துடன் அம்மன் பூஞ்சோலை சென்றது.விழாவில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முளையூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !