உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை திருப்பதியில் வரும் அக். 26ல் பவுர்ணமி கருட சேவை உற்சவம்

திருமலை திருப்பதியில் வரும் அக். 26ல் பவுர்ணமி கருட சேவை உற்சவம்

திருமலை, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் அக்டோபர் 26ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு கருட சேவை நடைபெற உள்ளது. அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை, ஜொலிக்கும் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள், திருமலையின் நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்குத் தரிசனம் அளிக்கிறார். பௌர்ணமி கருட சேவையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருமலையில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !