சுந்தரேசர் கோவிலில் அபிராமி அந்தாதி
ADDED :4632 days ago
புதுச்சேரி: கோரிமேடு அங்கையற்கண்ணி உடனுறைசுந்தரேசர் கோவிலில் அபிராமி அந்தாதி விழா நடந்தது. அபிராமி பட்டரைக் காப்பாற்ற, ஆதிபராசக்தி அம்மன் தை அமாவாசை தினத்தில் நிலவொளியை உண்டாக்கி அருள் புரிந்ததாகக் கூறப்படும் நிகழ்ச்சியை முன்னிட்டு, கோரிமேடு அங்கையற்கண்ணி உடனுறை சுந்தரேசர் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6.00 மணிக்கு அபிராமி அந்தாதி பாராயணம் செய்யப்பட்டது. அந்தாதியின் 79வது பாடலின்போது, நிலவொளி காண்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.