உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் மன்றத்தில் நன்னீராட்டு நாள் விழா

வள்ளலார் மன்றத்தில் நன்னீராட்டு நாள் விழா

சங்கராபுரம் : சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் திருச்சபையின் 21ம் ஆண்டு நன்னீராட்டு நாள் விழா நடந்தது. மன்ற துணைத் தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். மன்ற நிர்வாகிகள் முத்துகருப்பன், நாராயணன், பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். விழா அமைப்பாளரும் முன்னாள் ரோட்டரி தலைவருமான வெங்கடேசன் வரவேற்றார். மன்ற பூசகர்கள் தமிழ்மணி அடிகள், வேலா சாரங்கபாணி முன்னிலையில் அகவல் படிக்கப்பட்டு மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சைவ சித்õந்த பேராசிரியர் ஜம்புலிங்கம் சன்மார்க்க கொடியேற்றினார். ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி, நடேசன், செட்டியந்தூர் சன்மார்க்க சங்க தலைவர் ராமலிங்கம், நாச்சியப்பன், நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.சிறப்பு ஜோதி தரிசனத்தை தொடர்ந்து அன்ன தானம் வழங்கப்பட்டது.இன்னர் வீல் கிளப் பொருளாளர் செல்வி வெங்கடேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !