காமாட்சி, வராகி சிலை பிரதிஷ்டை
ADDED :7 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதி கிரிவலப்பாதை போஸ்ட் ஆபீஸ் அருகே அதிசய காமாட்சி, பஞ்சமுக வராஹி அம்பாள் தியான மையத்தில் பஞ்சமுக வராஹி, அதிசய காமாட்சி அம்பாள் விக்ரகங்கள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.
காலையில் காமாட்சி சுப்ரபாத சேவை, விக்னேஸ்வர பூஜை, லலிதா சகஸ்ரநாம பாராயண ஹோமம், மூலமந்திர ஹோமங்கள் நடந்தது. பின்பு 11:35 மணிக்கு அதிசய காமாட்சி அம்பாள், பஞ்சமுக வராகி அம்பாள் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பாலா பூஜை, சுமங்கலி பூஜை நடந்தது. அஷ்டவராகி அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்தனர்.