அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்
ADDED :9 days ago
புதுச்சேரி: செட்டிப்பட்டு எல்லை காளியம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் எல்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.