இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு
ADDED :15 hours ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சுவாமிக்கு சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு நடந்தது.
செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமானை வழிபடுவது மற்றும் விரதம் இருப்பது செவ்வாய் தோஷத்தின் தாக்கத்தை குறைப்பதுடன், பொருளாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சிறந்த வெற்றியைத் தரும் என்பது நம்பிக்கை. அதன்படி இந்திலியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவிலில் நேற்று காலை 10:30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சத்ரு சம்ஹார திரிசதி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.