உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்: சாரதாதேவியார்

முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும்: சாரதாதேவியார்

* கடவுளை வணங்கு. நல்ல காலம் பிறக்கும்.  
* பிறர் செய்யும் தவறுகளை நினைத்து வருந்தாதே.
* இளமையிலேயே கடவுளைத் தேடுபவன் பேறு பெற்றவன்.  
* அம்மாவிற்கு வேண்டிய உதவிகளை செய். அதுவே மேலான தர்மம்.
* பிறரது கெட்ட குணத்தை பற்றி பேசினால் அந்தக் குணம் உனக்கும் வந்துவிடும்.
* நம்பிக்கையுடன் செயல்படு. முயற்சியில் வெற்றி பெறுவாய்.  
* கடவுளிடம் உதவி கேள். நிச்சயம் அவர் செய்வார்.  
* ‘போதும்’ என்ற மனதுடன் செயல்படு. மகிழ்ச்சியாக இருப்பாய்.
* கடவுள் உன்னை எப்படி வைத்தாலும் அதை திருப்தியுடன் ஏற்றுக்கொள்.
* கடவுளின் திருநாமத்தை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்.  
* நீ செய்த வினைகளுக்கு பயன்களை அனுபவித்தாக வேண்டும்.
* வாழ்க்கையில் துன்பம் வந்தாலும் அதை பொறுமையுடன் ஏற்றுக்கொள்.
* குறைவாக சாப்பிடு. கூச்சப்படாதே.
* சுறுசுறுப்புடன் செயல்பட்டால் பெரிய விஷயம்கூட எளிதாகும்.
* குடும்பத்தினருக்கு மரியாதை கொடு. அதுவே உயர்ந்தது.  
* நீ சாப்பிடும் உணவை பொறுத்தே உனது குணம் அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !